Saturday 4th of May 2024 09:09:29 AM GMT

LANGUAGE - TAMIL
-
மொனராகலை DAG ஆடை தொழிற்சாலை பிரதமரால் திறக்கப்பட்டது!

மொனராகலை DAG ஆடை தொழிற்சாலை பிரதமரால் திறக்கப்பட்டது!


மொனராகல DAG ஆடை தொழிற்சாலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (2021.03.06) முற்பகல் திறக்கப்பட்டுள்ளது.

500 மில்லியன் ரூபாய் முதலீட்டில் டீ.ஏ.ஜீ. அப்பரல் (பிரைவட்) லிமிடட் (DAG Apparel (Pvt) LTD) புதிய ஆடை தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.

இதன்மூலம் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 3000 பேர்வரை மறைமுக நன்மைகளை அனுபவிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய ஆடை தொழிற்சாலை ஊடாக ஆடை ஏற்றுமதியில் ஆண்டிற்கு 3.5 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாவை வெட்டி புதிய ஆடை தொழிற்சாலையை வைபவரீதியாக திறந்துவைத்த பிரதமர், அங்கு உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெறும் முறை குறித்தும் கண்காணித்தார்.

இவ்வாடை தொழிற்சாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் காமினி கீர்த்திரத்ன, பணிப்பாளர் குழு உறுப்பினர்களான தினுக ஸ்ரீமால், நிபுண கித்மல், ஷானிகா காரியவசம், சுனெத் கயாஷான் ஆகியோரும் பிரதமருடன் ஆடைத் தொழிற்சாலையின் கண்காணிப்பு விஜயத்தில் பங்கேற்றனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, டலஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர்களான ஷஷீந்திர ராஜபக்ஷ, விஜித பேருகொட, பாராளுமன்ற உறுப்பினர்களான குமாரசிறி ரத்நாயக்க, வைத்தியர் கயாஷான் நவனந்த, முன்னாள் அமைச்சர் சுமேதா ஜீ ஜயசேன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்ம உதயசாந்த குணசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.


Category: செய்திகள், புதிது
Tags: மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE